விலகினால் நல்லது
ADDED :3 days ago
* பொறாமை கொண்டவர் உங்களின் வீழ்ச்சியை ரகசியமாக விரும்புவார்.
* வஞ்சக மனம் கொண்டவர் நம் கண் முன்னே சிரிப்பார். இல்லாத போது தீங்கு செய்வார்.
* எதிர்மறையாக சிந்திப்பவரின் நட்பு உங்களின் வளர்ச்சியை தடுக்கும்.
* பொய் சொல்பவர் உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உண்மையை திரிப்பார்.
* வதந்தியை பரப்புபவர் நீங்கள் இல்லாத போது புறம் பேசுவார்.
* குறை சொல்லும் நபரால் நேர்மறை எண்ணம், வெற்றி மனப்பான்மை மறையும். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது நல்லது.