உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 21 தலைமுறைக்கும்...

21 தலைமுறைக்கும்...

சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் கீழ்க்கண்ட பலன்களை பெறுவர்.  

* சாஸ்தா கோயிலைக் கட்டுவதற்கு உதவினால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.  
* ஐயப்பன் கோயிலுக்கு பசுவும், கன்றும் தரும்  வாய்ப்பு முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் கிடைக்கும்.  
* சாஸ்தாவின் சன்னதியை கோலமிட்டு மெழுகி சுத்தம் செய்தவருக்கு இந்திர லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
* சாஸ்தாவின் கோயிலுக்கு அபிஷேக பொருள், நெய், எண்ணெய் கொடுத்தவருக்கு கிரக தோஷம், நோய், வறுமை நீங்கும். சுகமாக வாழ்வர்.  
* சாஸ்தாவின் திருமேனியை தொட்டு பூஜை செய்பவருக்கு உணவு, தண்ணீர் கொடுப்பவருக்கு  நிம்மதியான துாக்கம் வரும்.
* உத்திர நாளில் விரதமிருந்து ஐயப்பனை வழிபட்டால் சகல சவுபாக்கியம், செல்வம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !