உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களின் கவனத்திற்கு...

பக்தர்களின் கவனத்திற்கு...

மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு சபரிமலையை தரிசித்த ஒருவரை குருசுவாமியாக தேர்ந்தெடுப்பது நல்லது. மனம், உடல், குடியிருக்கும் வீடு ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பம், பொருளாதாரம், வீட்டுப் பெண்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குருசுவாமியின் வழிகாட்டுதலுடன் மாலை அணிய வேண்டும்.

காலை, மாலையில் நீராடி துாய்மையைக் கடைப்பிடித்து சரணகோஷம் சொல்லி ஐயப்பனை வழிபட வேண்டும். ஜோதி தரிசனம் செய்ய செல்பவர்கள் குருசுவாமியின் கைகளால் இருமுடி கட்ட வேண்டும். குலதெய்வ அருளோடு ஐயப்பன் சன்னதியில் இருமுடியை சமர்ப்பித்து ஜோதி தரிசனம் செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !