சூரிய மதம்
ADDED :181 days ago
உலகின் எல்லா நாடுகளிலும் சூரிய வழிபாடு இருந்தாலும் இந்தியாவில் சூரியனை மட்டும் வழிபடும் ‘சவுரம்’ என்ற மதம் பழங்காலத்தில் இருந்தது. ‘மண்டல பிரம்மோபநிஷதம்’ என்னும் உபநிடதம் சூரியனை முழுமுதற்கடவுளாக சொல்கிறது. யாக்ஞவல்கிய மகரிஷிக்கு சூரியன் நேரில் தோன்றி இந்த உபநிடதத்தை உபதேசித்தார்.
பிற்காலத்தில் சூரிய வழிபாடு நவக்கிரக வழிபாட்டில் இணைந்து விட்டது. நவக்கிரகங்களின் தலைவனாக சூரியன் விளங்குகிறார். வாரத்தின் முதல் நாளுக்குரியவர் இவரே . ‘ஞாயிறு’ என்பதற்கு சூரியன் என்று பொருள்.