ஜெபம் செய்யுங்கள்
ADDED :174 days ago
‘நிறைய பணம் வேண்டும். கார், பங்களா வேண்டும். அழகான மனைவி வேண்டும்’ என பிரார்த்தனை செய்கின்றனர். தான் மட்டும் வாழ வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனையே ஆண்டவரால் ஏற்கப்படும்.
“உதடுகளால் துதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயமோ துாரத்தில் உள்ளது’’ என்கிறது பைபிள்.
இனியாவது, ‘‘ஆண்டவரே! சரியான நேரத்தில் வேண்டியதை தாரும். கஷ்டம் வரும் போது துணையாக நில்லும். நல்ல பாதையில் நடக்கச் செய்யும். அனைவரையும் ஆசீர்வதியும்’’ என ஜெபம் செய்யுங்கள்.