உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வதந்தியை பரப்பாதீர்

வதந்தியை பரப்பாதீர்

‘வீண்பழி சுமத்துகிறார்களா... அது உங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களின் சூழ்ச்சி. நம்மால் வளர முடியவில்லையே என நினைப்பவர்களின் ஆதங்கம். இந்த நிலையில் உங்களுக்கு தேவை சகிப்புத்தன்மை’ என்கிறார் நெப்போலியன்.


இவருடைய புகழுக்கு களங்கம் உண்டாக்க சிலர் முயற்சித்தனர். ‘‘பாரிஸ் சர்ச்சில் உள்ள தேவமாதா கண்ணீர் வடிக்கிறாள். இதற்கு காரணம் நெப்போலியனின் கொடுங்கோல் ஆட்சி’ என வதந்தியை பரப்பினர். இதற்கு ஏற்றவாறு இரவோடு இரவாக சிலையை மாற்றி 

அமைத்தனர்.


வதந்தியைக் கேள்விப்பட்ட நெப்போலியன் சர்ச்சுக்குப் போனார். அங்குள்ள சிலை கண்ணீர் வடிப்பது போல மாற்றி இருப்பதைக் கண்டார். உடனே இந்த உண்மையை மக்களுக்கு விளக்கினார். இந்நிலையிலும் வதந்தி பரப்பியவர்களை தண்டிக்காமல் நேர்மையுடன் செயல்படுங்கள் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !