அப்பாவை கவனி
ADDED :3 days ago
நபிகள் நாயகத்தை சந்தித்த ஒரு இளைஞன், ‘‘நான் சம்பாதித்த பணம், பொருட்களை என் அப்பா பயன்படுத்துகிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை’’ என்றான். ஊன்றுகோல் உதவியுடன் தள்ளாடியபடி நடந்து வந்த அவனுடைய அப்பா, ‘‘என் மகனுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்தேன். வாழ்நாள் முழுவதும் அவனுக்காக உழைத்தேன். ஆனால் என்னை வெறுக்கிறான்’’ என வருந்தினார்.
கோபப்பட்ட நாயகம், ‘‘நீயும்,
உன் பணமும் அப்பாவிற்கு உரியது. ஒருவேளை பெற்றோர் அநியாயம் செய்தாலும், அன்பு காட்டுவது உன் கடமை. எனவே அப்பாவை கவனி. சுவனம் செல்வாய்’’ என இளைஞனுக்கு அறிவுரை கூறினார்.