உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா 50வது ஆண்டு உற்சவம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா 50வது ஆண்டு உற்சவம்

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் செங்குந்த முதலியார் சங்கம் சார்பில் 50வது ஆண்டு திருவிழா நடந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்குந்த முதலியார் சங்கத்தினர் சார்பில் 50-வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. காலை கணபதி பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார். அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆண்கள் பெண்கள் காவடி ஆட்டம் ஆடினர். துருவம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் மற்றும் பல்லக்கு ஊர்வலம், முக்கிய இடங்கள் வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !