/
கோயில்கள் செய்திகள் / திருமலையில் வரும் 30ம் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் வெங்கமாம்பா ஜெயந்தி விழா
திருமலையில் வரும் 30ம் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் வெங்கமாம்பா ஜெயந்தி விழா
ADDED :8 hours ago
திருப்பதி: திருமலையில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, நரசிம்ம ஜெயந்தி மற்றும் மகா பக்தை மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பாவின் ஜெயந்தி விழா ஆகிய மங்களகரமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வைகாசி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, திருமலை கோவிலில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருமலை ஆலயத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதே நாளில், திருமலையில் அமைந்துள்ள தரிகொண்ட வெங்கமாம்பா நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி (மலர் தூவி வழிபாடு) செலுத்தப்படும். மாலை வேளையில், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகள் நாராயணகிரி தோட்டத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பக்தி கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.