உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி முனீஸ்வரர் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சக்தி முனீஸ்வரர் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில் மேடு ஸ்ரீ சக்திமுனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது.


கடந்த . 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 26ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்தி அழைப்பு சிறப்பு பூஜை நடந்தது. 27ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கங்கையில் இருந்து, கரக ஊர்வலம் நடந்தது.  பகல், 2:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜையுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொங்கல் பூஜையுடன், பகல், 12:00 மணிக்கு, தாரை தப்பட்டை முழுங்க, ஐயனுக்கு சிறப்பு பூஜையும் இடம் பெற்றது. மாலை, 6:00 மணிக்கு, கரகம் கங்கை சேர்த்தலை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.  நாளை  (29ம் தேதி), காலை 10:00 மணிக்கு, சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், கோவில் மேடு சுற்று வட்டார கிராமங்களில் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று ஐயனை வழப்பட்டனர். வரும் நான்காம் தேதி காலை, 7:00 மணிக்கு, மறுபூஜியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !