கூடலுாரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கூடலுார்: கூடலுாரில் செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கூடலுார் முனியாண்டி சுவாமி செல்வ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துங்கியது. காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர். இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி எல்.எப்.ரோடு, காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடுமையான வெப்பம் நிலவியதால் பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது பொதுமக்கள் தெருக்களில் தண்ணீரை ஊற்றி வரவேற்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.