உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ திருக்கல்யாணம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவ விழாவில், நேற்று இரவு உற்சவர் முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.


திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான சித்திரை பிரம்மோத்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சூர்ய பிரபை, பூதம், சிம்மம், ஆட்டுக்கிடாய், பல்லக்கு, அன்னம், வெள்ளிமயில் வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவில் நேற்று 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  நாளை 30ம் தேதி தீர்த்தவாரி சண்முக சுவாமி உத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !