உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் மீது சூரிய ஒளிக்கதிர்: பக்தர்கள் பக்தி பரவசம்

அம்மன் மீது சூரிய ஒளிக்கதிர்: பக்தர்கள் பக்தி பரவசம்

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வெற்றிலைகாளிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் சூரிய ஒளிக்கதிர் அம்மன் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றிலைகாளிபாளையத்தில் பழமையான மகா சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி ஆண்டுதோறும், சக்தி மாரியம்மன் சிலை மீது சூரிய ஒளி முழுமையாக விழும் நிகழ்வு நடந்து வருகிறது. இன்று சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மதியம், 12:00 மணியளவில் சூரியனின் ஒளி கதிர்கள் நேராக அம்மன் சிலை மீது விழுந்தது. இச்சம்பவத்தால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, சக்தி மாரியம்மன் கோயில் பக்தர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் சூரிய ஒளியின், 90 சதவீத ஒளி கதிர்கள் அம்மன் மீது விழும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை தரிசிக்கும் பக்தர்களுக்கு யோகம், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நாடும், வீடும் நலம் பெறும் என்பது நம்பிக்கை என்றனர். விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !