உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடைக்கால நெரிசலைச் சமாளிக்க திருமலையில் விரிவான ஏற்பாடுகள்

கோடைக்கால நெரிசலைச் சமாளிக்க திருமலையில் விரிவான ஏற்பாடுகள்

திருமலை; கோடை விடுமுறை மற்றும் கடந்த சில நாட்களாகத் தொடங்கியுள்ள பக்தர்களின் அதிகப்படியான வருகையை முன்னிட்டு, ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குச் சிறந்த வசதிகளை உறுதி செய்ய திருமலையில் விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


கடும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்க, பாடகங்கம்மா சந்திப்பு முதல் கோகர்பம் அணை சந்திப்பு வழியாக வெளிவட்டச் சாலை வரை நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்காக்களிலும் கூடுதல் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காகத் தரைப்பகுதியில் வெப்பத்தைத் தணிக்கும் ‘கூலிங் பெயிண்ட்’ பூசப்பட்டுள்ளது. குறிப்பாகக் கோவில் சுற்றுப்புறங்கள், லட்டு கவுண்டர்கள் மற்றும் பக்தர்கள் நடமாடும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நான்கு மாட வீதிகளிலும் தரை வெப்பத்தைக் குறைக்க ‘சிந்தெடிக் எனாமல் கூல் பெயிண்ட்’ பூசப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நடமாடும் தண்ணீர் தொட்டிகள் மூலம் ஸ்ரீவாரி சேவகர்கள் தொடர்ந்து குடிநீர் வழங்கி வருகின்றனர். தினமும் மூன்று பிரிவுகளாக மொத்தம் 45 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க திருமலையில் மொத்தம் 16 மருத்துவ மையங்கள் தயார் நிலையில் உள்ளன.அறைகள் கிடைக்காத பக்தர்கள்  பத்மநாப நிலயத்தில் உள்ள சுமார் 9,000 லாக்கர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !