நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பாலாலயம் பூஜை
ADDED :154 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவில் பாலாலயம் பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டி என சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமி, வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி, தெப்ப உற்சவம் போன்றவை விமரிசையாக நடக்கும். இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. புதியதாக விநாயகர், முருகன் கோவில் கட்டும் பணி முடிந்தது. நேற்று பாலாலயம் பூஜையை முன்னிட்டு கோ பூஜையும் சிறப்பு யாகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் ஜூன், 7ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க பூஜை செய்தனர்.