அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
அவிநாசி: அவிநாசி, கைகாட்டிப்புதுாரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா, 27ம் தேதி மஞ்சள் முடிப்பு, பொட்டுச்சாமி பொங்கல் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிேஷகம் செய்தல் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவில் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவில், இன்று மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், மஞ்சள் நீராட்டு விழா ஆகியன நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மகா மாரியம்மன் வழிபாடு மன்ற அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.