உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன வண்டிசோலை கருமாரியம்மன் திருவிழா துவக்கம்

சின்ன வண்டிசோலை கருமாரியம்மன் திருவிழா துவக்கம்

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை, தேவி கருமாரியம்மன் கோவிலில், 122வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


குன்னுார் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 122 வது ஆண்டு திருவிழா நேற்று காலை, 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு முகூர்த்த வளையல் அணிவித்தல், அன்னதானம் நடந்தது. இன்று காப்பு கட்டுதல், தேர் பவனி, சீர்வரிசை எடுத்து வருதல், உச்சி கால பூஜை, இன்று திருக்கரக ஊர்வலம் நடக்கிறது. நாளை தேதி உரியடி, பூ குண்டம் திருவிழா, 11ம் தேதி மஞ்சள் நீராடல், மறுபூஜை, புஷ்ப, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் சுற்றுபுற கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !