உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

கால பைரவருக்கு பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பக்தர்கள் பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று சிறப்பு பூஜை நடந்தன. மாலையில் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. துரைசாமி குருக்கள் தலைமையிலான குழுவினர்கள் பூஜையினை நடத்தி வைத்தனர். பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !