நஞ்சுண்ட கண்டனுக்கு கொன்றை மலர் சூடி அருட்கோலம் காண வேண்டும் கண் கோடி
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு, நேற்று மகா அபிேஷகம் நடந்தது.
சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜர் – சிவகாமியம்மனுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை அபி ேஷகம் நடக்கிறது. சித்திரை மாத திருவோண நட்சத்திரம், ஆனி உத்திரம், மார்கழி – திருவாதிரை நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய ஆறு நாட்கள் மகா அபிேஷகம் நடக்கிறது.
சித்திரை மாத திருவோணமான நேற்று, சிவாலயங்களில், ஸ்ரீநடராஜப்பெருமான், சிவகாமியம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கனகசபை மண்டபத்தில், நடராஜர் – சிவகாமியம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது. பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனப்பொடி, மஞ்சள், அரிசி மாவு, சந்தனம், பன்னீர், இளநீர், விபூதியில் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சித்திரை மாதத்துக்கு உரிய கொன்றை மலர் உள்ளிட்ட பல்வேறு மலர்மாலைகளை அணிவித்து, மகா அலங்கார பூஜை நடந்தது. இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வரர், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் காசிவிஸ்வநாதர், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.