நாசிக் திரியம்பகேஷ்வர் கும்பமேளாவிற்கான லோகோ வெளியிட்டது மகாராஷ்டிரா அரசு
மும்பை: 2027ம் ஆண்டு நாசிக் திரியம்பகேஷ்வரில் நடைபெறவுள்ள சிம்ஹஸ்த கும்பமேளாவிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை மகாராஷ்டிரா அரசு இன்று புதன்கிழமையன்று வெளியிட்டது.
சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இச்சின்னத்தை வெளியிட்டார் என்று ஓர் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கும்பமேளா ஆணையம், MyGov மற்றும் இந்திய வடிவமைப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நாடு தழுவிய போட்டியின் மூலம் இச்சின்னத்தின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்ற இப்போட்டியில், சர்வதேசப் பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட 70 உள்ளீடுகள் உட்பட, மொத்தம் 3,067 வடிவமைப்புகள் பெறப்பட்டது குறிபிடத்தக்கது.