உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலை கோயிலில் தனியார் அன்னதான மடங்களுக்கு அனுமதி இல்லை

சதுரகிரி மலை கோயிலில் தனியார் அன்னதான மடங்களுக்கு அனுமதி இல்லை

மதுரை, மதுரை மாவட்டம் சதுரகிரிமலை கோயிலில் அன்னதான மடங்களை மீண்டும் திறக்க தாக்கலான வழக்கில்,‛அன்னதானம் கோயில் நிர்வாகத்தால் மட்டுமே நடத்தப்படுகிறது. தனியார் மடங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை,’ என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. வழக்கறிஞர் முத்திருளப்பன் தாக்கல் செய்த மனு:  பேரையூர் தாலுகா சாப்டூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளன.  இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பல அன்னதான மடங்கள் மூலம்  பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. அம்மடங்களை அறநிலையத்துறையினர் மூடினர்.    மடங்களை மீண்டும் திறக்க வேண்டும். கழிப்பறைகளை புதுப்பித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் வசதி செய்ய தமிழக அரசுக்கு உத்தவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 


நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக்,‛அன்னதானம் கோயில் நிர்வாகத்தால் மட்டுமே நடத்தப்படுகிறது. எந்தவொரு தனியார் மடங்களும் செயல்பட அனுமதிக்கப்படவில்லை,’என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !