தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி பொங்கல் விழா
ADDED :138 days ago
கமுதி: கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனிஸ்வரர் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. சித்தி விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதியில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.பின்பு தர்ம முனிஸ்வரர் பால் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின் அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பெருமாள் தேவன்பட்டி நிர்வாகிகள்,விழா கமிட்டியினர் செய்தனர்.