கொள்ளாபுரியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கோலாகலம்
ADDED :5 days ago
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே, கொள்ளாபுரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜாத்திரை திருவிழா, கடந்த 12ம் தேதி பள்ளிப்பட்டு நகர எல்லையில் உள்ள செல்லாலம்மன், நிப்புலபோலேரம்மன் கோவிலில் பொங்கல் வைபவத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று கொள்ளாபுரியம்மன் கோவில் ஜாத்திரை உத்வசம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கொள்ளாபுரியம்மனுக்கு, நேற்று காலை திரளான பெண்கள் கூழ் வார்த்தனர். இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், கொள்ளாபுரியம்மன் பள்ளிப்பட்டு நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கங்கையம்மன் கோவிலில், கேத்திநேனி பாப்பாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று ஜாத்திரை உத்சவம் நடத்தினர்.