உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன் கோவிலில் செடல் திருவிழா

சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன் கோவிலில் செடல் திருவிழா

 புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சஞ்சீவி நகர் கிராமத்தில் சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.

இக்கோவில் பிரம் மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 8;00 மணிக்கு மாரியம்மன் வீதியுலா, 12;00 மணிக்கு கெங்கையம்மன், மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மாலை 6;00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று 20ம் தேதி அரக்கு மாளிகை கொளுத்துதல், இரவு 7;00 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. நாளை 21ம் தேதி மாலை 7;00 மணிக்கு பகாசூரனுக்கு அன்னம் அளித்தல், 22ம் தேதி இரவு அர்சுனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல் யாணமும் நடக்கிறது.அ தனை தொடர்ந்து 23ம் தேதி, 24ம் தேதிகளில் இரவு 10;00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 25ம் தேதி மாலை 6;00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !