உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் சத சண்டி மகா ஹோமம் துவக்கம்

தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் சத சண்டி மகா ஹோமம் துவக்கம்

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.


புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, அபிஷேக ஆராதனை, நவாவரண பூஜை, கன்யா, வடுக, தம்பதி, சுவாசினி பூஜைகள், வேதிகார்ச்சனை, சப்தசமி பாராயணம், சப்தசமி ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகா பைரவி பலி, மகா யோகினி பலி, தீபாராதனை, 20ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, அபிஷேக ஆராதனை, நவாவரண பூஜை, கன்யா, வடுக, தம்பதி, சுவாசினி பூஜைகள், சப்தசதி பாராயணம் ஹோமம், விசேஷ 108 திரவ்யாஹுதி, மகாபூர்ணாஹுதி, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !