உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருட்டப்பள்ளியில் நவராத்திரி உத்சவம்; ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் தரிசனம்

சுருட்டப்பள்ளியில் நவராத்திரி உத்சவம்; ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் தரிசனம்

ஊத்துக்கோட்டை: சுருடப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், நேற்று தொடங்கிய நவராத்திரி விழாவில், உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், நேற்று சாரதா நவராத்திரி விழா தொடங்கியது. கோவிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும், காலை 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:30 மணிக்கு, அன்னை மரகதாம்பிகைக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. உற்சவர் அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, லலிதாசகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், இன்று மாலை காமாட்சி அலங்காரத்தில் உற்சவர் மரகதாம்பிகை அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !