உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. அதற்கு முன்பாக சுவாமிகள் பல்லக்கில் கோயிலை சுற்றி வந்தனர். சுவாமிகள் முன்பு கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் மே 25-ல் மேலுாரில் எழுந்தருள்கின்றனர். மே 28ல் திருக்கல்யாணம், மே 29 ல் தேரோட்டம், மே 30 ல் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !