உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை

தீவனுார் விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை

திண்டிவனம்: தீவனுார்  சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்து.

குரு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதனையொட்டி, கோவில் வளாகத்தில் யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தி  யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து  குரு தட்சணாமூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. பின், பூஜிக்கப்பட்ட கலசநீரால் குருபகவானுக்கு அபிஷேகம் நடந்தது.  வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த குரு தட்சணாமூர்த்திக்கு, பஞ்சமுக தீபாராதனை நடந்தது.  ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் ஆலம்பூண்டி கோவிந்தசாமி குடும்பத்தினரும், புதுச்சேரி ‘தினமலர்’ ரவி குடும்பத்தினரும் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !