உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாபட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி

அய்யாபட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துள்ளனர். திருவிழா மே.19 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக மே.27 அம்மனுக்கு தீச்சட்டி ,மாவிளக்கு, கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். நேற்று மேளதாளம் முழங்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !