திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்
ADDED :3 days ago
மேலூர்; திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
திருவாதவூர் திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழாவை 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் மே 25-ல் மேலுாரில் எழுந்தருளினார். நேற்று மே 28ல் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து. இன்று மே 29 ல் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமாவ பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை மே 30 ல் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.