உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

சக்தி மாரியம்மன் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 19ம் தேதி, நோன்பு சாட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி, முகூர்த்தக்கால் நடப்பட்டது. 25ம் தேதி, கணபதி ஹோமம், கங்கணம் அணிவித்தல், முளைப்பாரி எடுத்தல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது.

26ம் தேதி, பொங்கல் வைத்தல், சக்தி கரகம் எடுத்தல், நகை ஆபரண பெட்டி மற்றும் சீர்த்தட்டு எடுத்து வருதல், அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தலும், கிடாய் வெட்டுதலும் நடந்தது.

நேற்று, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா மற்றும் வள்ளிக் கும்மி நிகழ்ச்சி நடக்கிறது. இன்று, அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !