உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தியார்குண்டு கோயிலில் வைகாசித் திருவிழா

கூத்தியார்குண்டு கோயிலில் வைகாசித் திருவிழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள உச்சி மாகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 19ல் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது.

அன்று முதல் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.‌

கண்மாய் கரையில் இருந்து மேளதாளங்களுடன் கோயில் பூஜாரி பூக்கரகம் எடுத்து கோயிலுக்கு வந்து அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உச்ச நிகச்சியாக நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச் சென்று கண்மாயில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !