தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் திருக்கல்யாணம்
ADDED :2 days ago
சேத்துார்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நடந்தது.
முன்னதாக அம்மையப்பர் பிரியாவிடை உடன் ராஜ அலங்காரத்திலும், அன்னை தவம் பெற்ற நாயகி மனக்கோலத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் செய்தனர்.