உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய் கோயில் கும்பாபிஷேக விழா

சீரடி சாய் கோயில் கும்பாபிஷேக விழா

விருதுநகர்: விருதுநகர் அருகே பெரியவள்ளிகுளம் சீரடி சாய் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் தொடர்ந்து நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள் நடந்து முதற்காலயாக பூஜைகள் துவங்கியது. நேற்று 2ம் கால யாக பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோயில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.

இதை நாரம்புநாத பட்டர் என்ற பாலாஜி தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் மூலவர் சீரடி சாய்க்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கே.ஜி.என்.கனகரத்தினம், மாரீஸ்வரி குடும்பத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !