உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா திருமஞ்சனம்; பக்தர்கள் பரவசம்

உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா திருமஞ்சனம்; பக்தர்கள் பரவசம்

கோவை; நரசிம்மர் ஜெயந்தி என்பது திருமாலின் நான்காவது அவதாரம் என அழைக்கப்படுகிறது இதை நரசிம்மர் அவதரித்த திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறோம்  இதை யொட்டி கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று 29ம் தேதி மூலவர் லட்சுமி நரசிம்மர் உற்சவர் ஆகிய தெய்வங்களுக்கு மகா திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. இதில் ரிக் யஜுர் சாம வேத பாராயணங்களும் படிக்கப் பட்டன தொடர்ந்து சனிக்கிழமை 31-05-2026 அன்று திருப்பாவாடை உற்சவம் தீபாரதனை ஆகியன நடைபெற்றது மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் அதனை தொடர்ந்து சுவாமி உற்சவர் திருவீதி உலா நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உற்சவர் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !