உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜை

கோவை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜை

கோவை;  வைகாசி விசாகம் தமிழ் மாதம் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும்  இணைந்து வரும் நாளை வைகாசி விசாகம் என்று அழைக்கின்றோம் வைகாசி விசாகம் நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் முப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம் இதையொட்டி  கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !