காமன்கோட்டை இருளாயி அம்மன் கும்பாபிஷேகம்
ADDED :124 days ago
பரமக்குடி: போகலுார் ஒன்றியம் காமன்கோட்டை இருளாயி அம்மன் கும்பாபிஷேக விழா மே 28ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்களை சுமந்து சென்றனர். மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், சோனையா, காளியம்மன், அடைக்கலம் காத்தான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து நேத்திக்கடன் செலுத்தினர். காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.