பாலாஜி வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :124 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சுக்கில நத்தத்தில் பாலாஜி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், அஷ்ட லட்சுமி ஹோமம், கோமாதா பூஜை, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, உற்ஸ வர் கருடாழ்வார் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 3ம் கால யாக சாலை பூஜை, கும்ப ஆராதனை நடந்தது, கும்பம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பாலாஜி, வெங்கடாசலபதி, பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ பெருமாள் ஆகியோருக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ., கடலூர் எஸ்.பி., ஜெயக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழா குழுவினர் செய்தனர்.