உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

வைத்தியநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

இக்கோயிலில் மே 21 முதல் வைகாசி திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் பல்லக்கு சேவையும், இரவு வீதியுலாவும் நடந்தது. மே 27 இரவு திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று காலை 8:15 மணிக்கு புதிய தேரில் சுவாமியும், மற்றொரு தேரில் அம்பாளும் எழுந்தருளினர். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரோட்டம் துவங்கியது. முதலில் சுவாமி தேரும், பின்னர் அம்மன் தேரும் ரத வீதிகள் சுற்றி வந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !