மணவாள மாமுனிகள் கோயிலில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் கோயிலில் கும்பாபி ஷேகம் நடந்தது.
மணவாள மாமுனிகள் சன்னதியில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோ பூஜை, புண்யாகவாசனம் நடந்தது. பின் உற்ஸவர் மணவாள மாமுனிகள் எழுந்தருள, கும்ப புறப்பாடு நான்கு வீதிகள் சுற்றி வந்தது.
பின்னர் காலை 6:00 மணிக்கு சடகோப ராமானுஜ ஜீயர் தலைமையில் பட்டர்கள், மூலஸ்தான விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை சடகோப ராமானுஜ ஜீயர், அவரது சீடர்கள் செய்திருந்தனர்.
* விழுப்பனூர் அழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி பட்டர்கள் கும்பாபிஷேகம் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு கீழ ரத வீதி மாரியம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. தூத்துக்குடி செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச பரமாச்சாரியார் கும்பாபிஷேக விழாவை துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.