உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொஞ்சிமலை அம்மன் கோவிலில் செடல் திருவிழா

கொஞ்சிமலை அம்மன் கோவிலில் செடல் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மழவராயனுார் ஸ்ரீ கொஞ்சிமலை அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி நேற்று காலை 9:15 மணிக்கு மூலவர் கொஞ்சிமலை அம்மனுக்கும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 5:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !