பொள்ளாச்சி வீரவிநாயகர் கோவிலில் ஆண்டு விழா
ADDED :120 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி கந்தசாமிபுரம் வீரவிநாயகர் கோவிலில், 11ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து வீரவிநாயகருக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு கணபதி ஹோமம், யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. மாக்கினாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.