காரமடை மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :118 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே கன்னார்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருவறை, மூன்று நிலை கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய திருப்பணிகள் செய்து, கடந்த மாதம், 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. நேற்று மண்டல பூஜையின் நிறைவு விழா நடந்தது. குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஊர் கவுடர் ரங்கராஜ், செயலாளர் சாம்ராஜ், பொருளாளர் பத்ரசாமி, பூசாரி சுந்தரம் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.