தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா
ADDED :125 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா 3 நாள் நடந்தது. விழாவில் சுவாமி அழைப்பு, கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல், சேற்றாண்டி வேடம் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்டவை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.