உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி நெய்யில் கலப்படம் : திண்டுக்கல்லில் ‘சல்லடை’

திருப்பதி நெய்யில் கலப்படம் : திண்டுக்கல்லில் ‘சல்லடை’

 திண்டுக்கல்: திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், திண்டுக்கல்லில், 20 மணிநேரம் வரை நடத்திய சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து, திண்டுக்கல், புதுடில்லி உட்பட நாடு முழுதும், 11 இடங்களில் நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிரடி சோதனை நடத்தியது. இதில், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்கள், முதலீடுகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்த, திண்டுக்கல், ‘ஏ.ஆர்., டெய்ரி புட்’ நிறுவனம், அதன் உரிமையாளர் ராஜசேகரன் வீடு என, இரு இடங்களில் நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தில் இரவு, 7:00 மணிவரை, 11 மணி நேரம் சோதனை நடந்தது. உரிமையாளர் ராஜசேகரன் வீட்டில், விடிய விடிய, 20 மணி நேரம் நடந்த சோதனை நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு முடிந்தது. இங்கு சிக்கிய ஆவணங்களை விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !