உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் முறைகேடுகள்; முடிவு கட்ட தமிழக அரசு தீவிரம்

கோயில்களில் முறைகேடுகள்; முடிவு கட்ட தமிழக அரசு தீவிரம்

கோவை: திருச்செந்துாரில் அதிரடியாக செயல்பட்டு மூவரை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து கோவையிலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உஷாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆன்மீக சுற்றுலா மையமாக கோவையில் மருதமலை சுப்ரமணியசுவாமி, காரமடை அரங்கநாதசுவாமி, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர், தடாகம் அனுவாவிசுப்ரமணியர், பூண்டி வெள்ளிங்கிரியாண்டவர் என்று ஏராளமான கோயில்கள் கோவையில் உள்ளன. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்கு செல்கின்றனர். சுவாமியை எளிதாக தரிசிக்க பக்தர்களிடம் கணிசமான பணம் கறக்கப்படுகிறது. இதற்கென்று ஏராளமான புரோக்கர்கள் இருக்கின்றனர். த.வெ.க. அரசு இதற்கு முடிவுகட்ட விரும்புகிறது. பணியாளர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் வேலை செய்யும்படி சென்னையில் இருந்து போனில் அழைத்து அறிவுறுத்தி வருகின்றனர். பேரூர் பட்டீசுவரர், மருதமலை சுப்ரமணிய சுவாமி, காரமடை அரங்கநாதசுவாமி கோயில்களில் அறிவிப்பு பலகை பிரதானமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. “பக்தர்கள் எந்த குறை இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகம் நுங்கம்பாக்கம் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம். கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 -425- 1757 ல் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !