உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கந்தவடி உற்ஸவம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கந்தவடி உற்ஸவம்

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா கந்தவடி உற்ஸவத்தில் கருட சேவையுடன் நிறைவடைந்தது.

எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 119 வது வைகாசி வசந்த விழா மே 30 துவங்கி நடந்தது. வரதராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு மண்டகப் பணிகளில் சேவை சாதித்தார். ஜூன் 5 பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மீண்டும் கோயிலை அடைந்தார். நேற்று முன்தினம் உற்ஸவ சாந்தி விழாவில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று மாலை வசந்த விழாவில் நிறைவு நாளாக கந்தவடி உற்ஸவம் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் வானவேடிக்கைகள் முழங்க மேள தாளத்துடன் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !