சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்
சிதம்பரம்; சிதம்பரம் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவையொட்டி பெரியண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் , சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோட்டில் உள்ள பெரிய அண்ணா குளம் எதிரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இக் கோவில் 57 ஆம் ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா கடந்த 3 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன், கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும், பாரதம் படித்தல் , கரகம் எடுத்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம்.இரவு அம்மனுக்கு முத்து பல்லக்கு உலா நடைபெற்றது. பின்னர் பெரிய அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது .முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்பாள் வீதியுலா நடந்தது. அதனைத் தொடர்ந்து அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி எழுந்தருதி பக்தர்களுக்கு காட்சி தந்தார். உற்சவத்தில் குளத்தை 3 முறை தெப்பம் சுற்றி வந்த பிறகு பின்பு மீண்டும் அம்பாள் கோயிலுக்கு, மேல தாளம் முழங்க அழைத்துச் சென்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் திரளாக வந்திருந்து சாமி தரிசனம் செய்து, தெப்ப உற்சவத்தை கண்டு களித்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.