உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி; அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவிலில் மகா மகாகும்பாபிஷேகம் நடந்தது.

செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி சோலைவாழி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை இதை முன்னிட்டு 6ம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாச வாசனம், எஜமான சங்கல்பம், அனுச்ஞை, கோ பூஜை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆகியனவும், மாலை 5 மணிக்கு வருண பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், விசேஷ அலங்காரம், 108 மூலிகை பொருட்கள் யாகம் ஆகியனவும் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், வேத பாராயணம், மூலமந்திர ஹோமம், சன்னாவதி திரவியம், மகா தீபாரதனையும், 9 மணிக்கு அம்மச்சார் அம்மன், மோகம்பரி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கங்கையம்மன், சோலைவாழி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 11 மணிக்கு மாரியம்மன் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மாரியம்மன் மகா அபிஷேகமும், இரவு அம்மன் வீதி உலாவும் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !