உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி

உத்தரகோசமங்கை, ஜூன் 9- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி முன்புறம் மேற்கு நோக்கியவாறு சேத்திர கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது.இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சேத்திர கால பைரவருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது வடைமாலை, வெற்றிலை மாலை, செவ்வரளி பூக்கள் சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், வடை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !